இல்லறம் சிறக்க செய்ய வேண்டிய யாகங்கள் என்ன?

0
144

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெறுக்கிக் கொண்டனர். யாகங்களால் இவை மட்டுமல்ல, பெறுதற்கரிய பிறவிப் பேறும் பெற முடியும். வாழ்க்கையில் யோகிகள் மட்டுமல்ல, இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில யாகங்கள் உண்டு.


இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்யவேண்டிய 5 வித யாகங்களை கீழ்க் கண்டவாறு பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
1.தேவயாகம், 2.பூத யாகம், 3.மனித யாகம், 4.பிரம்ம யாகம், 5.பிதுர் யாகம்.
தேவ யாகம்: ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும்.


பூத யாகம்: ஒவ்வொருவரும் தினமும் ஒரு பிராணிக்கு (பசு, பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஒர் உயிரி னத்துக்கு) ஒருபிடி உணவு அளிக்க வேண்டும்.


மனித யாகம்: தினமும் ஒரு ஏழை மனித னுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம்.


பிரம்ம யாகம்: அறிவை கொடுத்த ஆசானை யும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யெக்கியமாகும்.


பிதுர் யாகம்: நம்முடைய காலஞ்சென்ற மூதா தையர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலிய வற்றைத் தவறாமல் செய்வது பிதுர்யாகம்.


யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது.
யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப் பணித்தல் ஆகும். நம்மிடம் உள்ளபொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறை வனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும். அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா? அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம். அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல் கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார். அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை தர்மகாண்டத்தில் பேசுகிறது. பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்கா யாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.

Previous articleடி.ஆர்.பாலுவை கண்டு கொள்ளாத கனிமொழி! மக்களவையில் அரங்கேறிய அதிகார மோதல்
Next articleகல்லூரி மாணவி கொலை வழக்கு 12 ஆண்டு கழித்து துப்பு கிடைத்தது?