பாண்டிச்சேரியில் பரபரப்பாக வேலை செய்யும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ டீம்!

0
221

பாண்டிச்சேரியில் பரபரப்பாக வேலை செய்யும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ டீம்!

சிவகார்த்திகேயன் முதல் முதலாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

அப்படி இப்போது பிரின்ஸ் மற்றும் மாவீரன் ஆகிய இரு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது.

பிரின்ஸ் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. படத்தில் உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

Previous articleமழை நீரில் நெல்மணிகள் நனையும் அவலம்! கொள் முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள் வேதனை!
Next articleதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here