பொங்கல் பரிசு பொருட்கள் எப்போது வழங்கப்படும்?

0
367

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரே‌ஷன் அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 27, 30 தேதிகளில் நடைபெற உள்ளதால் பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 29-ந்தேதியே தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2 கோடி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகளை கொள்முதல் செய்ய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது.

அதன்படி ரே‌ஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவைகளை பாக்கெட்டு போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் முடிந்துவிடும்.

அதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000-த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

வருகிற புதன்கிழமை இருந்து ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அனேகமாக பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 20-ந்தேதி வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleசச்சின் தேடிய ஓட்டல் ஊழியர் இவர்தான்?
Next articleசீரடியில் தரிசனத்திற்கு வந்த 88 க்கும் அதிகமானவர்கள் மாயம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here