முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்!

0
138

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்!

நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவின் அடையாளங்களுள் ஒருவர். 40 ஆண்டுகளாக நடிகராக இருந்துவரும் அவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

மோகன்லால் இயக்கத்தில் ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை மோகன் லாலின் நண்பர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். ஆனால் கொரோனா காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படத்தில் பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர். மோகன்லால் பரோஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக இடைவெளி விட்டு நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Previous articleமனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்:! பின்பு நடந்த கொடூரம்!!
Next articleஇந்த வீடியோவை பார் சூடேறும்..சிறுவனை கடத்திச் சென்று 30 வயது மதிக்கத்தக்க பெண் உல்லாசம்!.. வெளிவந்த பகீர் சம்பவம்?..