செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் பி பிரிவு தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. 4வது சுற்றில் ஆடவர் மற்றும் மகளிர் சி பிரிவு அணிகள் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் வழங்கினர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜேசு ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பாக ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் தல 3 அணிகள் பங்கேற்றிருக்கின்றன. இதன் 4வது சுற்றில் ஆண்கள் பிரிவில் இந்தியா ஏ அணி பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் காய்களை நகரத்தினர். இதன் காரணமாக, இந்த பிரிவில் விளையாடிய ஹரி கிருஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜுன் மற்றும் நாராயணன் உள்ளிட்ட 4 பேரும் டிராவை சந்தித்தனர். இதன் காரணமாக, ஆட்டம் வெற்றி தோல்வியின்றி 2-2 என சமனில் முடிவடைந்தது. அதோடு நடப்பு தொடரில் இந்தியா ஓர் அணியாக சந்திக்கும் முதல் சமனாக இது அமைந்தது.
பி பிரிவு அணி பலம் வாய்ந்த இத்தாலியுடன் பல புரட்சி நடத்தியது. இதில் குகேஷ் மற்றும் நிகில் உள்ளிட்டோர் வெற்றியை பதிவு செய்தனர். ஆனால் பிரக்ஞானந்தா 42வது நகர்த்தலிலும், சத்வாணி 30வது நகர்த்தலிலும், டிராவை சந்தித்தனர். இறுதியில் 3-1 என்ற பள்ளி கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்து அசைக்க முடியாத அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்தது.
ஆண்கள் சி அணி சந்தித்தது இந்த பிரிவில் அபிஜித் பெயின்விரர் டேவிட் ஆட்டோனை எதிர்த்து வெள்ளை நிற காய்களை நகர்த்தினார். இதில் டேவிட் ஆட்டோன் சிறப்பாக விளையாடியதால் 41வது நகர்த்தலில் அபிஜித் அவரிடம் சரணடைந்தார். இதன் மூலமாக இந்திய ஆண்கள் அணிகளில் தோல்வியை சந்தித்த முதல் நபராக திகழ்ந்தார் அபிஜித். இது சி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் சறுக்கி விடக்கூடாது என்ற விஷயத்தில் கவனம் செலுத்திய சூரியகுமார், கங்குலி, சேதுராமன் மற்றும் கார்த்திகேயன், முரளி உள்ளிட்டவரால் டிராவையே சந்திக்க முடிந்தது. இறுதியில் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயின் வெற்றியடைந்தது. இதன் காரணமாக, நடப்பு தொடரில் இந்திய ஆண்கள் சி பிரிவு அணி முதல் தோல்வியை சந்தித்தது.
மகளிர் பிரிவைப் பொறுத்த வரையில் இந்திய ஏ பிரிவு அணி ஹங்கேரிக்கு எதிராக விளையாடியது. இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்திய தான்யா சச்தேவ் வெற்றி பெற்ற சூழ்நிலையில், கொனேரு ஹம்பி, ஹரிகா மற்றும் வைஷாலி உள்ளிட்டோர், எதிராளியுடன் சம பலத்துடன் மோதி ஆட்டத்தை டிரா செய்தனர். இதனால் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் இந்திய மகளிர் ஏ அணி போராடி வெற்றியை சந்தித்தது.
மகளிர் பி அணி ஸ்டோனியாவுடன் நேருக்கு நேர் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் வந்திகா அகர்வால் மட்டுமே வெற்றி பெற்றார். அதே சமயம் பத்மினி, திவ்யா, சௌமியா, உள்ளிட்டோர் டிராவை தான் சந்திக்க முடிந்தது. ஆனாலும் கூட எதிரணியிடம் சரணடையாமல் வெற்றி பயணத்தை தொடர்ந்தது.
இந்திய மகளிர் சி பிரிவு அணிக்கு எதிராக நின்றார் சார்ஜியா அணியின் கையே ஓங்கி இருந்ததால் இந்த அணி 3-1 என்ற வெள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. நந்திதா மட்டுமே இதில் வெற்றி பெற்றார். மற்ற இந்திய வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். இதன் காரணமாக. இந்திய மகளிர் சி பிரிவு அணியின் வெற்றி பயணத்திற்கு சார்ஜியா முட்டுக்கட்டை போட்டது.