ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரபரப்பு தகவல்! பொதுமக்களே உஷார்!

0
145

அரசையும் மக்களையும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் ஒரு நாட்டின் நிதி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவி செய்வது வங்கிகள் தான். நம்முடைய நாட்டில் பண்டிகை காலம் மெதுவாக துவங்கி வருகின்ற நிலையில், நடப்பு மாதம் அனேக விடுமுறை நாட்கள் வரவிருக்கின்றன.

சென்ற ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை இருந்தது இந்த நிலையில், நடப்பு மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலினடிப்படையில், நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் இருக்கின்ற வங்கிகள் சுமார் 18 நாட்களுக்கு செயல்படாது. இதில் வார விடுமுறை நாட்களும் அடங்கும் என சொல்லப்படுகிறது.

ஆகவே வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கிளைகளுக்கு செல்லும் முன்பாக விடுமுறை பட்டியலை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், சொல்லப்படுகிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 2வது 4வது சனிக்கிழமைகளையும் உள்ளடக்கியது.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 18 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் ஆனாலும் கூட வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இணையதளம் மூலமாக செயல்படும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல கிடைக்கும் என்கிறார்கள்.

முன்பே குறிப்பிட்டபடி ஆகஸ்ட் மாதத்தில் 18 வங்கி விடுமுறைகள் இருக்கின்றன. இதில் 6 வார விடுமுறைகள் 13 பிராந்திய விடுமுறைகள் உள்ளிட்டவை அடக்கம் இரண்டையும் சேர்த்தால் 19 நாட்கள் வங்கி விடுமுறைகள்.

ஆனாலும் இம்பாலின் பிராந்திய விடுமுறைக்கான தேசபக்தர் தினம் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வருகிறது. இது அனைத்து வங்கிகளும் மூடப்படும் மாதத்தின் 2வது சனிக்கிழமையாகும். ஆகவே நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 18 விடுமுறைகள் மட்டுமே இருக்கும் என குறிப்பிடபட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கி பட்டியலின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைகளின் பட்டியல்.

ஆகஸ்ட் 1: ட்ருக்பா ட்ஷே ஷி (கேங்டாக் – சிக்கிம் தலைநகர்)

ஆகஸ்ட் 8: மொஹரம் (அஷூரா) – ஜம்மு, ஸ்ரீநகர்

ஆகஸ்ட் 9: மொஹரம் (ஆஷுரா) – அகர்தலா, அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி

ஆகஸ்ட் 11: ரக்ஷா பந்தன் – அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா

ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் – கான்பூர் மற்றும் லக்னோ

ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம் – இம்பால்

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் – இந்தியா முழுவதும்

ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) – பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்

ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி – புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ

ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி  கிருஷ்ண ஜெயந்தி — அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா

ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி – ஹைதராபாத்

ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – கவுகாத்தி

ஆகஸ்ட் 31: விநாயக சதுர்த்தி – அகமதாபாத், பேலாபூர், பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி

வார இறுதி விடுமுறை நாட்கள்

ஆகஸ்ட் 7: முதல் ஞாயிறு

ஆகஸ்ட் 13: 2வது சனிக்கிழமை மற்றும் தேசபக்தர் தினம்

ஆகஸ்ட் 14: 2வது ஞாயிறு

ஆகஸ்ட் 21: 3வது ஞாயிறு

ஆகஸ்ட் 27: 4வது சனி

ஆகஸ்ட் 28: 4வது ஞாயிறு