பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… நடிகர் விக்ரம் ஏன் கலந்துகொள்ளவில்லை… ரசிகர்கள் குழப்பம்!
நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மேல் அதிருப்தியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியானது. உடல்நலக்குறைவு காரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் தற்போது இரு தினங்களுக்கு முன்னர் நடந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான பொன்னி நதி பாடலின் வெளியீட்டு நிகழ்விலும் விக்ரம் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த பாடல் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் பாடல் என்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்னத்தின் மேல் அதிருப்தியில் இருப்பதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு படத்தில் மற்றவர்களை விட குறைவான காட்சிகளே உள்ளதாக அவர் நினைக்கிறாராம். அதுவும் இல்லாமல் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு விடும் என்பதால் அவருக்கு மிகப்பெரிய அளவில் காட்சிகள் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலின் படியே ஆதித்தகரிகாலன் கதாபாத்திரம் முக்கியத்துவம் குறைவாகக் கொண்ட ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.