விருமன் இசை வெளியீட்டில் கலந்துகொள்ளும் இரண்டு முக்கியப் பிரமுகர்கள்!

0
190

விருமன் இசை வெளியீட்டில் கலந்துகொள்ளும் இரண்டு முக்கியப் பிரமுகர்கள்!

கார்த்தி நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீடு நாளை நடக்க உள்ளது.

ஏறனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நாளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டுக்கு இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. விருமன் திரைப்படத்தை அடுத்து கார்த்திக்கு பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக ‘விருமன்’ திரைப்படத்தை தயாரிக்கிறார் என்பதால் அவர் கலந்துகொள்ள, தனது மகள் அதிதி நடிகையாக அறிமுகம் ஆவதால் இயக்குனர் ஷங்கரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஆடியோவோடு டிரைலரும் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleபொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… நடிகர் விக்ரம் ஏன் கலந்துகொள்ளவில்லை… ரசிகர்கள் குழப்பம்!
Next articleசேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு!