‘கோஹ்லியின் இடத்தைக் காப்பாற்றதான் இந்த முடிவா?…’ பார்த்திவ் படேல் குற்றச்சாட்டு!

‘கோஹ்லியின் இடத்தைக் காப்பாற்றதான் இந்த முடிவா?…’ பார்த்திவ் படேல் குற்றச்சாட்டு!

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறக்கப்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் வழக்கமாக நான்காம் இடத்தில் ஆடும் சூர்யகுமார் யாதவ்வை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். ஆனால் அந்த முடிவு பெரியளவில் பலனளிக்கவில்லை. இதுகுறித்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. முகமது கைஃப் இதுபற்றி பேசும்போது “உண்மையிலேயே எனக்கு அந்த முடிவை ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை.

அதுபோல முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் “சூர்யகுமார் யாதவ்வை ஓப்பனராக இறக்கி அவரின் திறமையை வீணாக்காதீர்கள். அவர் நான்காம் இடத்தில் இறங்கி சிறப்பாக விளையாடுகிறார். உலகக்கோப்பையில் அவர் அந்த இடத்தில்தான் விளையாட வேண்டும். ஓப்பனராக இறக்கி அவரின் திறமையை வீணாக்க வேண்டாம். அணிக்கு ஓப்பனர் வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கிவிட்டு இஷான் கிஷானை அணியில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என கேப்டன் ரோஹித் ஷர்மாவை கண்டிக்கும் விதமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் இப்போது முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் இதுபற்றி பேசும்போது “கோஹ்லியின் மூன்றாம் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ் அச்சுறுத்தலாக இருக்கிறார். அவர் அந்த இடத்தில் இறங்கி அதிக ரன்கள் சேர்த்தால் கோஹ்லி அணிக்குள் வரும்போது சிக்கலாக அமையும். அதனால்தான் அவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குகின்றனர். கோஹ்லியின் இடத்தைக் காப்பாற்ற கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பிசிசிஐயும்  எடுத்துள்ள முடிவு இது” எனக் குற்றம்சாட்டும் விதமாக கூறியுள்ளார்.

Leave a Comment