திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர்

0
212

திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர்

ஏற்கனவே யூட்யூபில் திரை விமர்சனம் மூலம் பிரபலமான புளூசட்டை மாறன் அவர்கள் இயக்குனராகி தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்த திரைப்படத்திற்கு அவர் ‘ஆன்ட்டி இந்தியன்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு நடந்து வருவதாகவும் இந்த படம் அனேகமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் யூடியூபில் இருந்து இன்னொரு பிரபலம் தற்போது இயக்குனராகிறார். யூடியூபில் ‘புட் சட்னி’ என்ற பெயரில் ஒரு சேனலில் பிரபலமாகி அதன் பின்னர் பிளாக் ஷீப் அணியுடன் இணைந்து பல வீடியோக்களில் தோன்றியவர் ராஜமோகன். இவர் ஏற்கனவே ‘நட்பே துணை’ ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர்

இந்த நிலையில் இவர் தற்போது ஒரு படத்தை இயக்க ஆரம்பகட்ட பணியை செய்து வருவதாகவும் இவர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கும் பெரும்பாலானோர் யூடியூப் சேனலை சேர்ந்தவர்களே என்றும் கூறப்படுகிறது. ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கும் படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணி கொண்ட ஒரு படம் என்றும் இருப்பினும் இறுதியில் சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் இருக்கும் என்றும் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

யூடியூபில் இருந்து பெரிய திரைக்கு இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் அதிகம் அறிமுகமாகி கொண்டிருப்பது ஆரோக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது.

Previous articleஇவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்
Next articleஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? அமைச்சர் சி.வி.சண்முகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here