எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு சிபிஐ விசாரணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! ஆனால்…!

Photo of author

By Sakthi

அதிமுக ஆட்சியில் இருந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி அதன்பிறகு கடந்த 2016 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததற்கு பின்னர் அவரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாலும் கூட தன்னிடமிருந்த நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணிதுறையை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்த போது அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகாரெழுந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் வருடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திராவிடர் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றரை தொடர்ந்தார். அதாவது 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை டென்டரில் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவர் புகார் வழங்கினார். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதேசமயம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலே இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வடக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை தொடர்ந்து அந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது சிபிஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனதில் இன்று சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதேநேரம் மறுபடியும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கிய அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மறுபடியும் விசாரிக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.