மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!!

0
142

மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!!

கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இத்திட்டமானது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தை,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என்று முதலமைச்சரால் மாற்றி அமைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 1000ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஸ்டுடென்ட் லாகின் முகவரியும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் இத்திட்டத்தில் சேர ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்த அரசு மேலும் 10 நாட்கள் நீடித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான புதிய அறிவிப்பினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.அதாவது இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் சேரும் கல்வி நிறுவனங்கள் இவர்களின் ஆதார் எண்ணை இணைக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Previous articleகடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..
Next articleசனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!