வரலட்சுமி விரதம் தரும் அபூர்வ பலன்கள்!

Photo of author

By Sakthi

வரலட்சுமி விரதம் தரும் அபூர்வ பலன்கள்!

Sakthi

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு மிகவும் உகந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்தது என்பது எல்லோரும் அறிந்தது தான்.

அந்த விதத்தில் ஆடி மாதம் 3ம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு மிகவும் சிறப்பான வெள்ளிக்கிழமை என சொல்லப்படுகிறது.

பார்வதி தேவியின் மற்றொரு வடிவமான காளிகாம்பாளை மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று வணங்கினால் தைரியம் அதிகரிப்பதுடன் ஆரோக்கியமும் சீராகும். மிகக் கொடிய நோய் தாக்கம் குறையும், நிலையான தொழில் மற்றும் உத்தியோக அனுகூலம் ஏற்படும் என்கிறார்கள்.

அதோடு தொழிலில் உபரி லாபம் ஏற்படும் தொழிலாளி மற்றும் முதலாளிகளுக்கிடையே இருக்கின்ற பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். பதவி உயர்வு கிடைக்கும்.

மேலும் சுய ஜாதகத்தில் சனி, ராகு, கேது சேர்க்கையால் உண்டாகும் இன்னல்கள் குறைவதற்கான வாய்ப்புள்ளது என்றும், தெரிவிக்கப்படுகிறது.