யார் சிறந்தவர்… கோலியா? ரோஹித் ஷர்மாவா?… பிசிசிஐ அதிகாரி அளித்த பதில்!

0
258

யார் சிறந்தவர்… கோலியா? ரோஹித் ஷர்மாவா?… பிசிசிஐ அதிகாரி அளித்த பதில்!

இந்திய அணியின் சிறந்த வீரர்களில் இருவர்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோஹ்லியும் இந்தியாவுக்காக பல போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்திய அணியின் தற்போதைய அனுபவம் மிக்க இரண்டு சிறந்த வீரர்களாக விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்ககளாக கோலியின் பேட்டிங் முன்புபோல இல்லை. அவர் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்து வருகிறார். இது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு அவர் அனைத்து விதமான கேப்டன் பொறுப்புகளையும் துறந்துள்ளார். ஆனாலும் அவரின் மோசமான ஃபார்ம் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்தான் ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரும் சர்வதேச போட்டிகளில் சதமடித்து 2 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.

இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் தோமலிடம் ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “அப்படியெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. எங்களுக்கு இருவரும் ஒன்றுதான். இந்த ஒப்பீடு இப்போது மட்டும் இல்லை. காலம் காலமாக நடந்து வருகிறது. கவாஸ்கர்- கபில்தேவ் மற்றும் சச்சின் – கங்குலி என தொடர்ந்தது.  இணையத்தில் எல்லா சுதந்திரமும் உள்ளது. ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால் பிசிசிஐ அனைத்து வீரர்களையும் சமமாகதான் நடத்துகிறது.” என்று கூறியுள்ளார்.

Previous articleவரலட்சுமி விரதம் தரும் அபூர்வ பலன்கள்!
Next article“ஆசியக்கோப்பையில் கோலியின் இடம் மாற்றப்படலாம்…” பார்த்திவ் படேல் கருத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here