தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!..
ஆந்திர மாநிலம் திருப்பதியடுத்த கப்பல் கூடகம் பகுதியைச் சேர்ந்தவர் முனி ராஜா.இவர் சுமார் 3000 வாத்துக்களை தன் இருப்பிடத்தில் வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல
பாடு ஏரியில் மூன்று ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.
அவர் கண்முன்னே நன்றாகத்தான் 3 ஆயிரம் வாத்துக்களும் பசிக்காக புழுக்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போதே அந்த வாத்துக்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது.இந்நிலையில் அருகில் உள்ள ஏரியிலிருந்த தண்ணீரை அந்த மூணாயிரம் வாத்துக்களும் குடித்துக்கொண்டிருந்தது.
திடீரென்று அந்த வாழ்த்துக்கள் அனைத்தும் துள்ளி விழுந்து இறக்கப்பட்டையால் அடித்துக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட முனி ராஜா அருகில் ஓடி வந்து வாத்துக்களை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை கொஞ்சம் வெளியேற்றிவிட்டு மீதமுள்ள தண்ணீரில் மீன் பிடித்துள்ளார்கள். மேலும் ஏரியில் இருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளார்கள்.
விஷம் கலந்த தண்ணீரை குடித்த அப்பாவி பட்ட வாத்துக்கள் இறந்தது தெரியவந்தது. தண்ணீரை சிறிதளவு எடுத்து உயர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த பரிசோதனை மூலம் இந்த வகை விஷம் எவ்வகையை சார்ந்தது என கண்டறியப்படும்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து வந்தது.