டி 20 உலகக்கோப்பையில் ஷமி இருப்பாரா….? பிசிசிஐ அதிகாரி தெரிவித்த கருத்து!

0
142

டி 20 உலகக்கோப்பையில் ஷமி இருப்பாரா….? பிசிசிஐ அதிகாரி தெரிவித்த கருத்து!

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில மாதங்களாக டி 20 போட்டிகளில் விளையாடுவதில்லை.

டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதுதான் தற்போது பிசிசிஐக்கு இருக்கும் சிக்கலான வேலையாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 15 பேரைத் தேர்வு செய்வது மிகப்பெரிய குழப்பமான பணியாகும்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் வழக்கமான இடம்பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிசிசிஐ தேர்வாளர்கள் அவரை 50-ஓவர் வடிவத்திலும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் அவர் இனிமேல் டி 20 போட்டிகளில் ஒரு வீரராக கருதமாட்டார் என்று சொல்லப்படுகிறது.

“ஷமி இன்னும் இளம் வீரர் இல்லை, டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் எங்களுக்குத் தேவை. அதனால் அவர் டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவருடன் பணிச்சுமை மேலாண்மை குறித்து உரையாடினோம். இனி இப்படித்தான் இருக்கப் போகிறது. இப்போதைக்கு, அவர் டி20க்கான திட்டங்களில் இல்லை, மேலும் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படும், ”என்று தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Previous articleரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
Next articleஇரு மனைவிகளுடன் குதூகலம் போடும் நவரச நாயகன் கார்த்தி!..இதோ அவர்களின் புகைப்படங்கள்!..