டி 20 உலகக்கோப்பை தொடர்… சூர்யகுமார் யாதவ் இன்று உச்சத்தைத் தொட வாய்ப்பு

0
189

டி 20 உலகக்கோப்பை தொடர்… சூர்யகுமார் யாதவ் இன்று உச்சத்தைத் தொட வாய்ப்பு

சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. நேற்று நடந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்ட்டார்.

சமீபகாலமாக டி 20 கிரிக்கெட்டில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இப்போது பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரின் உச்சபட்ச தரவரிசையாகும். சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அவருக்கு முன் இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 818 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளார். இந்நிலையில் இன்று மற்றும் நாளை நடக்கும் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மேலும் புள்ளிகள் பெற்று பாபர் ஆசாமை தாண்டி டி 20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஏனென்றால் பாபர் ஆசாம் இனிமேல் ஆசியக் கோப்பை தொடரில்தான் விளயாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇரு மனைவிகளுடன் குதூகலம் போடும் நவரச நாயகன் கார்த்தி!..இதோ அவர்களின் புகைப்படங்கள்!..
Next articleவிஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார்… லோகேஷ் போடும் ஸ்கெட்ச்