குழந்தை பாக்கியம் அருளும் ஏகாதசி விரதம்!

Photo of author

By Sakthi

குழந்தை பாக்கியம் அருளும் ஏகாதசி விரதம்!

Sakthi

ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்திற்கும் ஒரு பலன் உண்டு என்கிறார்கள். அந்த விதத்தில் இன்று ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவமுள்ளது என சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்றும் இருக்கிறதாம்.

மிக நீண்ட தினங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு செல்வந்தர் தன்னுடைய உரையை முனிவர் ஒருவரிடம் கூறி அதற்கு பரிகாரம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த முனிவர் முன் ஜென்மத்தில் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும், நீ அடித்து விரட்டிவிட்டாய் இதன் காரணமாக, தான் குழந்தை பாக்கியம் இல்லாமல் போயிற்று என்று தெரிவித்துள்ளார். மேலும் இம்மாத வளர்பிறை ஏகாதசியில் விரதமிருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அந்த முனிவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே அந்த செல்வந்தர் ஏகாதசி விரதம் கடைபிடித்து குழந்தை பாக்கியத்தை பெற்றார் என்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இன்று ஏகாதசி விரதத்தை கடைபிடித்து மகாவிஷ்ணுவை வழிபட்டால், நிச்சயமாக பலன் கிடைக்கும். இன்று இந்த வருத்தத்தை மேம்படுத்த வயதானவர்களுக்கு தானங்களை செய்வது மிகவும் நன்று.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நேற்று கலிய நாயனார் குருபூஜை நடந்தது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவருடைய குருபூஜை நடைபெறும் என சொல்லப்படுகிறது.