3 நாளில் வசூலை வாரி குவித்த சீதா ராமம் திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 

0
181
Sita Ramam
Sita Ramam

Sita Ramam : 3 நாளில் வசூலை வாரி குவித்த சீதா ராமம் திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள சீதா ராமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 3 நாட்களில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹனு ராகவப்புடி இயக்கியுள்ளார் . இந்தப் படமானது 1964 இல் கதை நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது.

உறவுக்கு யாரும் இல்லாத ராம் என்ற ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை பெட்ரி சொல்வதே இந்த சீதா ராமம் திரைப்படத்தின் கதை. விடுமுறைக்கு செல்ல வீடே இல்லாத அந்த ராணுவ வீரனின் ஒரு செயல், நாட்டில் அவருக்கு பல உறவுகளை பெற்றுக் கொடுக்கிறது.

அப்போது ராமின் மனைவி சீதா என்ற பெயரில்,  முகவரி இல்லாத கடிதம் வருகிறது. அதனைத்தொடர்ந்து கடிதத்தை எழுதிய அந்த சீதாவை காதலிக்க தொடங்கும் ராம், அவளை தேடி புறப்படுகிறான். அவளை கண்டுபிடித்தானா? அவர்கள் சேர்ந்தார்களா? இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

Sita Ramam Movie Review Tamil Dulquer Salmaan Rashmika Mandanna Starring Sita  Ramam Review Rating | Sita Ramam Review:
Sita Ramam Movie Review Tamil Dulquer Salmaan Rashmika Mandanna Starring Sita Ramam Review Rating | Sita Ramam Review:

இத்துடன் அந்த காலகட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கிடையேயான உறவு,இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்டவைகளையும் படமாக்கியுள்ளார் இயக்குனர்.

இந்நிலையில் படம் வெளியான நாள் முதல் தற்போது வரை ரசிகர்களும், விமர்சகர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் வெளியான இந்த 3 நாட்களில் மட்டும் சீதா ராமம் திரைப்படம் சுமார் ரூ. 25 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்த வாரம் பண்டிகை நடக்க வேண்டுமானால் தமிழகத்திலுள்ள ஏழு மாநிலங்களும் இதை செய்ய வேண்டுமென மத்திய அரசு வார்னிங் ?..
Next articleபிளஸ் ஒன் மாணவியால் வாலிபர் பலி! போலீசார் விசாரணை!