11 ஆண்டுகள் கணவரின் உடலை பிரிட்ஜில் வைத்திருந்த மனைவி: அதிர்ச்சி தகவல்

Photo of author

By CineDesk

11 ஆண்டுகள் கணவரின் உடலை பிரிட்ஜில் வைத்திருந்த மனைவி: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் 75 வயது பெண் ஒருவர் தனது இறந்த கணவரை 11 ஆண்டுகளாக பிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜீன் மாதர்ஸ் என்ற 75 வயது பெண் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி மரணம் என்பதால் அவரது உடலை ராணுவ முறைப்படி அடக்கம் செய்ய ராணுவ வீரர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்

அப்போது அவரது வீட்டை சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் ஒன்றில் அவரது கணவர் உடல் இருந்ததை கண்டு ராணுவ வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு இறந்த ராணுவ வீரரை அவரது மனைவி 11 ஆண்டுகளாக ஃப்ரிட்ஜில் வைத்து இருப்பது தெரியவந்தது

மேலும் இறந்த ராணுவ வீரரின் உடலின் அருகே 2008ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது. ஆனால் இந்த கடிதத்தில் உள்ள விபரங்களை ராணுவ அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர். இதனால் அதில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய விஷயங்கள் இடம்பெற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கணவரின் உடலை 11 ஆண்டுகளாக ப்ரிட்ஜில் வீட்டிலேயே வைத்திருந்த மனைவி குறித்த தகவல் வெளியானதிலிருந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது