பிரபல மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை

Photo of author

By CineDesk

பிரபல மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை

CineDesk

Updated on:

பிரபல மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவரது வீட்டில் ரூபாய் 470 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபலமான மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன் என்பவராவார்.

35 வயதான இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகளுடன் சொகுசு மாளிகையில் தங்கி உள்ளார். இந்த மாளிகை 55 அறைகளை கொண்டது என்பதும் இந்த மாளிகையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு கொண்டது என்பதும், மாளிகை அமைந்துள்ள வீதியில் இரவு பகலாக காவல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட தனது கணவர் மற்றும் மகளுடன் பின்லாந்து நாட்டிற்கு சென்று இருந்தார். இதை தெரிந்துகொண்ட கொள்ளையர்கள் இவரது மாளிகைக்குள் நள்ளிரவில் புகுந்து அவரது படுக்கை அறையில் இருந்த சுமார் ரூ.470 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன், ‘24 மணி நேரமும் கடுமையான பாதுகாப்பு இருந்தும் இத்தனை பாதுகாப்பையும் மீறி கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தார்கள் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தக் கொள்ளைக்கு காவலர்கள் துணை இருக்கலாம் என்று அவர் சந்தேகம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து இங்கிலாந்து போலீசார் பாதுகாப்பு காவலர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கடுமையான பாதுகாப்பையும் மீறி 470 கோடி ரூபாய் நகைகளை மாடல் அழகி வீட்டில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.