வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்த குட் நியூஸ்!

0
178

ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடந்த இந்திய நாணய கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் 6ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்தியாவில் வசிக்கும் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கல்வி கட்டணம், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், போன்ற மற்ற கட்டணங்களை அவர்கள் வசிக்கும் நாட்டிலிருந்தபடியே செலுத்திக் கொள்ளக்கூடிய வசதியை மிக விரைவில் அறிமுகப்படுத்த விருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் தற்போது இந்தியாவில் வசித்து வரும் நபர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய விதத்திலிருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிலிருக்கின்ற அவர்களுடைய குடும்பத்தினருக்கு கல்வி மற்றும் மின்சாரம், குடிநீர் டெலிக்காம், எரிவாயு, டிடிஹச், போன்ற பல கட்டணங்களை பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக செலுத்தும் விதத்தில் அதன் எல்லையை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிபிஎஸ் பிளாட்பார்மில் இருக்கின்ற எந்த ஒரு பில்லர்களின் பில்களையும் செலுத்தக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்படவுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வங்கியால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பில் பேமென்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் இயக்கப்படும் ஒரு நிறுவனம்தான் பாரத் பெல் பேமென்ட் சிஸ்டம் இந்திய குடிமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் கரண்ட், குடிநீர், எரிவாயு ,டிடிஎச், டெலிபோன், செல்போன், போன்ற சேவைகளை பெறுவதற்கான கட்டணங்களை பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக செலுத்தலாம்.

இதில் 20,000க்கும் மேற்பட்ட பில்லர்கள் அதாவது கட்டணம் வசூல் செய்பவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒரு மாதத்திற்கு 8 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரையில் இந்த சேவையை இந்திய குடிமக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காகவும் இது விரிவுபடுத்தப்படவிருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து நேரடியாக பணம் பெறும் விதத்தில் பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் குடும்பங்களில் வசித்து வரும் முதியவர்கள் அதிகமாக பயன்பெறுவார்கள்.

இணையதளம் தொடர்பாக பெரிதாக அருந்திடாத முதியவர்களுக்கான பில் பேமெண்ட்களை இனி கவலையில்லாமல் NRIக்களே நேரடியாக செலுத்த முடியும்.

பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தில் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நெறிமுறை, அதோடு இயங்குதளம், உள்ளிட்டவை NRIக்களுக்கு ஏற்றவாறு மேம்படுத்தவிருக்கிறது.

இதன் மூலமாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் நம்பகமான பில் பேமென்ட் முறை சென்ட்ரலைஸ்டு வாடிக்கையாளர் குறைதீர்க்கும் மையம் மற்றும் யுட்டிலிட்டி பில்களை செலுத்துவதற்கான ஒரே வகையான வாடிக்கையாளர் கட்டணம் எந்த நாட்டிலருந்தாலும் இங்கிருக்கின்ற குடும்பத்தினரின் கல்வி மற்றும் மற்ற கட்டணங்களை செலுத்தும் வசதி உள்ளிட்டவற்றை அனுபவிக்கவிருக்கிறார்கள்.

Previous articleடிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி
Next articleகள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு! தாளாளர் உட்பட 5 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!