KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

Photo of author

By Vinoth

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

Vinoth

KGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருபவர்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதையடுத்து சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா, சுதா கொங்கரா ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.

மேலும் இதற்கிடையே கே.ஜி.எப் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபில்ம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் அப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர்கள் சூர்யா மற்றும் சிலம்பரசன் ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அந்த படத்தில் நடிக்கபோவது கீர்த்தி சுரேஷ்தான் என்று தற்போது சொல்லப்படுகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையான இந்த திரைப்படத்தில் பெண் மருத்துவர்கள் பற்றி பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக திரைக்கதை விவாதத்தில் எழுத்தாளர் நரன் உள்ளிட்டோரை சுதா ஈடுபடுத்தியுள்ளார். விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.