11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
திருச்சி மாவட்டம் ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது மர்மமாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் படிக்க முடியாமல் போனதால் தான் உயிரிழந்து விட்டதாக அவரே எழுதி வைத்த கடிதம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தாலும் மறுபக்கம் பல மாணவர்களிடம் அந்த மன அழுத்தம் இருந்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர். ஏதேனும் ஒரு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யும் படி பலர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து சரியான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், கட்டாயம் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். அதுமட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மாணவ மாணவிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மனநல ஆலோசனை வழங்கப்படும்.இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்குள் செல்வதை தடுக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.