கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Photo of author

By Parthipan K

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் ஏற்பட்ட கரும்புகை சூழ்ந்து கொண்டதால் அனைவராலும் ஒரே நேரத்தில் தப்பிக்க முற்பட்டதாலும் அதில் ஏற்பட்ட நெரிசல்களால் ஒருவரின் மீது ஒருவர் கீழே விழுந்து மிதித்து  அதனால் பலர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த நெரிசலில் பல குழந்தைகளும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீயில் இன்னும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்க கூடும் என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இந்த விபத்து  நான்காவது தளத்திற்கு மக்கள் அனைவரும் கூடி இரண்டாவது தளத்திலிருந்து முதலில் புகை வந்ததை பார்த்து அனைவரும் கீழே இறங்கியதாகவும் அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பகத்தால் 41 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.மேலும் சிலர் மீட்பு படையினரால் நீக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

எகிப்து அதிபர் அல்சிஸி காப்டிக் கிறிஸ்துவ மத போப் இரண்டாம் தவட்ரோஷை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தேவலாய தீ விபத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டது. அதிபர் தனது முகநூலில் ஒரு பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,விபத்து மீட்பு பணிகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறேன்.

இந்த சம்பவம் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று முகநூலில் கூறியிருந்தார். இந்நிலையில் எகிப்தில் உள்ள 10 கோடி மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள நிலையில் கிறிஸ்தவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக நீண்ட காலமாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்தப் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.