பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்காகதான் விளையாட விரும்பினார்… ராஸ் டெய்லர் சொன்ன பரபரப்பு கருத்து

0
248

பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்காகதான் விளையாட விரும்பினார்… ராஸ் டெய்லர் சொன்ன பரபரப்பு கருத்து

நியுசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தற்போது தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.

நியுசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து தற்போது தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த புத்தகத்தில் “அந்த போட்டியின் இலக்கு 195, நான் ஒரு டக் அவுட் ஆகி எல்பிடபிள்யூ ஆனேன், நாங்கள் அந்த போட்டியில் இலக்கை நெருங்கவில்லை. பின்னர், குழு, உதவி ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஹோட்டலின் மேல் தளத்தில் உள்ள பாரில் இருந்தனர். லிஸ் ஹர்லி வார்னியுடன் [ஷேன் வார்னே] இருந்தார். ராயல்ஸ் உரிமையாளர் ஒருவர் என்னிடம், ‘ராஸ், நாங்கள் நீ டக் அவுட் ஆவதற்காக. உனக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பணம் கொடுக்கவில்லை.’ என்று கூறி என்னை முகத்தில் மூன்று அல்லது நான்கு முறை அறைந்தார்.

ஆனாலும் அவர் சிரித்துக்கொண்டிருந்தார். அவை கடினமான அறைகள் அல்ல, ஆனால் அது முழுக்க முழுக்க விளையாட்டு-நடிப்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அதை ஒரு பிரச்சினையாக உருவாக்கப்போவதில்லை. ஆனால் பல தொழில்முறை விளையாட்டு வீரர்கள் இருக்கும் சூழல்களில் இது நடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.” என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தற்போது மற்றொரு பரபரப்பான தகவலையும் தன் புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில் ”நியுசிலாந்தில் பிறந்து தற்போது இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்து அணிக்காக விளையாடதான் விரும்பினார். இது சம்மந்தமாக நான் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் அனுப்பினேன். ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.

Previous articleதற்போதுள்ள நடைமுறை இந்த வகுப்பிற்கு தொடரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஒரு வருடம் நிறைவு! சாதனை என்ன தெரியுமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here