அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை! தனியார் பள்ளியில் இருந்து வரும் மாணவர் மாணவிகள்!

0
169

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை! தனியார் பள்ளியில் இருந்து வரும் மாணவர் மாணவிகள்!

         தமிழகத்தில் தற்போது 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு ஆரம்ப பள்ளிகள் 28 ஆயிரம்,  நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன. மாணவர்கள் எண்ணிக்கையை காரணமாக வைத்து தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஆனால்,  அந்தப் பள்ளிகள் மூடப்படாது, அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்படும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

       அரசு பள்ளிகளில்   மாணவர்கள் சேர்க்கையை நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்து மாதம் வரை நடத்தவதற்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதைதொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒரு தரப்பு மாணவர்களாக, அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றார்கள். இதைதொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்களை சேர்பதற்காக வந்துள்ளனர்.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

        நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் அதிகம் சேரும் பள்ளிகளைக் கணக்கெடுத்து, அப்பள்ளிகளில் தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளின் விவரங்களை தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்  தெரிவித்தார். செப்டம்பரில் காலாண்டு தேர்வு துவங்குவதற்கு  முன்பு வரை மாணவர்களை சேர்த்து கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டு உள்ளது.

Previous articleஅருண் விஜய்யின் லேட்டஸ்ட் ஹிட் ‘யானை’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Next articleஇதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!..