பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கமா? என்ன காரணம்?

0
187

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கமா? என்ன காரணம்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார் மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான போது அதில் இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த பட்டியல் இருந்தது.

இந்த பட்டியலில் வைரமுத்துவின் பெயர் மிஸ் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்தப் படத்தில் 12 பாடல்களையும் வைரமுத்துவே எழுத இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென அவரது பெயர் மிஸ் ஆகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மீடு பிரச்சனையில் வைரமுத்து சிக்கியதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

Previous articleகுடியுரிமை சட்ட மசோதா மீண்டும் ரயில் மறியல்?
Next articleகுழந்தைகள் ஆபாச பட விவகாரம்: திருச்சியை அடுத்து சென்னையில் கைது நடவடிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here