விக்ரம் மிரட்டல் லுக்கில் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
333

விக்ரம் மிரட்டல் லுக்கில் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சோழா சோழா’ பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த பாடலை சத்யபிரகாஷ், மகாலிங்கம், நகுல் அபயன்குமார் ஆகியோர் பாடியுள்ளனர். முன்னதாக பொன்னியின் செல்வன் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தோடு ரிலீஸ் ஆகும் திரைப்படமாக பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.

Previous articleஅம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!..
Next articleமோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here