நித்தியானந் தா மீது மேலும் ஒரு ஆள் கடத்தல் புகார்?

0
309
நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!
நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன என்பதை கண்டறிந்து தகவல் கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனிப்பட்ட kailaasa.org என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அதில் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் குவிந்து வருகிறது.

நித்தியானந் தா மீது மேலும் ஒரு ஆள் கடத்தல் புகார்?

இதனிடையே ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக புதிய புகார் தகவல் வந்துள்ளது

ஈரோட்டை சேர்ந்தவர் அங்குலட்சுமி என்பவர் சென்னை கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார் அதில்.

எனது மகன் பிரானாசாமி பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திடீரென நித்யானந்தா சீடராக மாறிய அவர் கடந்த 15 வருடங்களாக பெங்களூர் அருகே உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து வந்தார்.

எனது மகனை பார்க்கவோ, பேசவோ ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். நித்யானந்தாவின் சட்ட விரோத காவலில் இருந்து எனது மகனை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

Previous articleவெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்
Next articleநீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு: மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here