இனி வன்முறையில் ஈடுபட்டால் அவ்வளவுதான்! பாஜகவினரை எச்சரித்த செந்தில் பாலாஜி!

0
142

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வருவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 15 ஆம் தேதி கோவை வந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது.

ஆனாலும் அவருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானதை தொடர்ந்து முதலமைச்சர் கோவை பயணம் திடீரென்று தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்வரும் 24 ஆம் தேதி கிணத்துக்கடவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கொள்கிறார்.

இதனை அடுத்து முதலமைச்சர் கோவை வருவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது தெரிவித்ததாவது எதிர்வரும் 23ஆம் தேதி 1,50,000க்கும் மேற்பட்டோர் முதலமைச்சரை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.

24 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் கிணத்துக்கடவு பகுதியில் 1,06,641பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களையும், ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனையடுத்து பொள்ளாச்சியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமை தாங்குகிறார். மேலும் அப்போது பல்வேறு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையவுள்ளார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

100 யூனிட் மின்சாரம் ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல தான் இலவசம் மடிக்கணினி, சைக்கிள், உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் இலவசம் அடித்தட்டு மக்களை கைகோர்த்து அழைத்துச் செல்கின்றது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்துவதே தமிழக அரசின் தலையாய கடமை என தெரிவித்தார்.

இலவச திட்டங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்த செந்தில் பாலாஜி இலவசம் வேண்டாம் என தெரிவிப்பவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருகிறார்கள் என சுட்டிக்காட்டினார். இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் என்றும், அவர் தெரிவித்தார்.

அதோடு முதலமைச்சர் என் வருகைக்கு நாங்கள் கொடிகள் மற்றும் பேனர்களும் வைப்பதில்லை முதல்வருக்காக நாங்கள் சுவரொட்டிகள ஒட்டியதற்கு அந்த சுவரொட்டியின் மீது சுவரொட்டியை ஓட்டுவோம் என சொல்வது எப்படி? என கேள்வி எழுப்பினார் அமைச்சர் அதோடு போஸ்டர் ஓட்டும் விவகாரத்தில் அதிகாரிகளை மிரட்டும் வகையில் ஒரு கூட்டம் செயல்படுவதாகவும், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், தெரிவித்தார்.

பாஜகவை சார்ந்தவர்கள் தங்களுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என செயல்படுகிறார்கள் என்றும், இனிவரும் காலங்களில் யாராவது கோயம்பத்தூர் மாவட்டத்தில் சட்டத்தை கையில் எடுத்தால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அதோடு அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் கோயம்புத்தூர் வரும்பொழுது சுவரொட்டிகளை ஓட்டுகிறார்கள், அதனை நாங்கள் தடுக்கிறோமா? யாரேனும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.

Previous articleதொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
Next articleஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை!