இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

0
182

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதுபோல நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது யோகிபாபுதான் அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் யோகி பாபுதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஜினிகாந்தின் தர்பார் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார்.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் ஜெயிலர் திரைப்படம் பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் “ஆகஸ்ட் 22 காலை 11 மணி” என்று அறிவித்துள்ள நிலையில் படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் பற்றியோ அல்லது படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றியோ முக்கியமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில படங்கள் ரஜினிகாந்துக்கு வெற்றியைக் கொடுக்காத நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை அவர் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

Previous articleஇன்று மூன்றாவது ஒருநாள் போட்டி.. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?
Next articleபாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து