தனுஷ் ஐஸ்வரியா பிரிவுகளுக்கு பிறகு இணைந்த போட்டோ வைரல்! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

தனுஷ் ஐஸ்வரியா பிரிவுகளுக்கு பிறகு இணைந்த போட்டோ வைரல்! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

நடிகர் தனுஷ்விற்கும்  ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வரியாவிற்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வரியா இருவரும் 18 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள்.

இந்நிலையில் திடீர்ரென்று தனுஷும்  ஐஸ்வரியாவும்  சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர்.இவர்களின் இந்த திடீர் முடிவிற்கு என்ன கராணம்? என பல விதமான கேள்விகள் வலைதளத்தில் பரவி வந்துள்ளன.இதனால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறபட்டாலும் தனுஷும், ஐஸ்வர்யாவும் அமைதி காத்து வருகின்றனர்.இந்நிலையில் பிரிவிற்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அடுத்தபடியாக தனுஷ் மற்றும் ஐஸ்வரியாவின்  மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் யாத்ரா தனது பள்ளியில்  ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்போது தங்கள் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இயல்பாக தங்களது மகனை அணைத்த படி இருக்கின்றனர்.தனுஷ் மற்றும் ஐஸ்வரியா பிரிவிற்கு பிறகு கூட தங்களது மகனை உற்சாகப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து வந்துள்ளார்கள்.இதில் அவர்கள் கலந்துகொண்டது  நல்ல பெற்றோர்களின்  அடையாளம் காட்டுவதாக ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி எற்படுகிறது.

Leave a Comment