சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா!

0
274

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்த அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோபாக்‌ஷா ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை.

பிரின்ஸ் திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா ரியாபோபாஷ்யா தெரிவித்துள்ளார்.

பிரின்ஸ் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. முதலில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாவதாக இருந்த இந்த திரைப்படம் தற்போது தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Previous articleலைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?
Next articleஇனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here