இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் அதிகரிக்கும்!

0
129

மேஷம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள், அன்போடு பழகிய ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார், தொழில் போட்டி நீங்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு எண்ணங்கள் யாவும் எளிதில் நிறைவேறும் நாள். தொலைபேசி வழியே அனுகூலமான தகவல் கிடைக்கும், தொழில் ரீதியாக கேட்ட உதவிகள் நண்பர்கள் மூலமாக பூர்த்தியாகும், உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு தொட்டது யாவும் தொலங்கும் நாள். முன்னேற்றத்திற்கு உதவியை சிலரை சந்திப்பீர்கள், வெகு நாட்களாக தள்ளிப்போன காரியமொன்று இன்று திடீரென்று முடிவாகும், வாரிசுகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும்.

கடகம்

இன்று தாங்கள் நினைத்தது யாவும் நிறைவேறும் நாள். பொல்லாதவர்கள் தங்களை விட்டு விலகிச் செல்வார்கள். நிலையான வருமானத்திற்கு வழியாமைத்துக் கொள்வீர்கள், தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள். பக்குவமாக பேசி பாராட்டுக்களை பெறுவீர்கள், நண்பர்கள் சொல்லும் ஆலோசனை தங்களுக்கு நல்லதாக தெரியும், பரிமாற்றம் திருப்தி தரும்.

கன்னி

இன்று தங்களுக்கு இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலை விரிவு படுத்த முன்னெடுத்த முயற்சி கை கூடும். வரவேண்டிய தொகை வந்து சேரும், உத்தியோகத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும்.

துலாம்

இன்று தாங்கள் அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். உடல் நலனில் கவனம் தேவை உத்தியோகத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக சிந்திப்பீர்கள், பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடரும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும் நாள். விஐபிகளின் சந்திப்பு கிடைக்கும். பொதுநலத்தில் அக்கறை காட்டுவீர்கள், நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள், அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள், மனதில் இனம் புரியாத கவலைகள் ஏற்படும், குடும்பப் பெரியவர்கள் உங்களுடைய செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும்.

மகரம்

இன்று தாங்கள் சொல்லை செயலாக்கி காட்டும் நாள். தங்களுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள், மேலதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கிருந்த துன்பங்கள் யாவும் காணாமல் போகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் கடைசி சமயத்தில் கை கொடுத்து உதவி புரிவார்கள், நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு பாராட்டும், புகழும், அதிகரிக்கும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும், வியாபாரத்தில் புதிய அங்குதாரர்கள் வந்திணைவார்கள், அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும், உத்தியோகத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்.

Previous articleகுழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!                 
Next articleகுருவும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றுதான் என்பது உண்மைதானா?