குருவும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றுதான் என்பது உண்மைதானா?

0
99

தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு, இருவரும் ஒருவர்தான் என்பது உண்மையல்ல.

ஆனாலும் பலர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும், ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள். உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும், குரு பகவானுக்கும், நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அது தொடர்பாக தற்போது நாம் காணலாம்.

இவர் சிவன் அவர் பிரகஸ்பதி தட்சணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு பகவான் என்பவர் அதிகாரி தட்சிணாமூர்த்தி, சிவகுரு குரு, தேவ குரு.

தட்சணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு 6 அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சன் குமார் என்ற 4 பிரம்ம ரிஷிகளுக்கு போதிப்பவர் குருபகவான். நாவ கோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன் ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலா பலன்களை இடைமறித்து காலமறிந்து கொண்டு வருபவர்.

தட்சணாமூர்த்தி 64 சிவ வடிவங்களில் ஒருவர் குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5ம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல், மறைதல், என்ற தன்மைகள் இல்லாதவர். குருவோ உதயம், அஸ்தமனம், என்ற தன்மைகள் கொண்டவர்.

இத்தனை தத்துவ வேறுபாடுகளை கண்டுள்ள இந்த இரு தேவர்களையும் குரு என்ற ஒற்றை சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர், இவர்தான் அவர், என்று வாதம் செய்வது சரியான முறையல்ல.

தட்சணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக அதாவது சிவகுருவாக வழிபாடு செய்யுங்கள், ஒரு சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள், அதற்கு அனைத்து பரிகார பூஜைகளும் செய்கிறார்கள்.

குரு பகவானுக்கு அணிவிக்க வேண்டிய மஞ்சள் ஆடையை தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள், கடலை சாதம் போன்ற குரு கிரக நெய்வேத்திய பொருட்களை தட்சிணாமூர்த்திக்கு நெய் வேத்தியம் செய்கிறார்கள்.

குரு பெயர்ச்சி தினத்தன்று தட்சணாமூர்த்தி சன்னதியில் ஓமங்கள், அபிஷேக ஆதராதனைகள், சாந்தி பரிகாரங்கள், உள்ளிட்டவற்றை செய்கிறார்கள். இவற்றையெல்லாம் தவறென ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்று பலரும் வாதம் செய்கிறார்கள்.

குரு பகவான் என்பவர் தேவகுரு மட்டும்தான், ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குரு என சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, குருவுக்கு செய்வதை இவருக்கு செய்வதில் தவறில்லை என்றும் வாதம் செய்கிறார்கள்.

சிலர் குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்று தெரிவிக்கிறார்கள், அதுவும் தவறு குருவுக்கு அதிதேவதை இந்திரன், பிரத்தியதி தேவதையோ பிரம்மதேவன், இதற்கான ஆதாரங்கள் பல நூல்களில் இருக்கின்றன.

இருவரும் ஒன்றுதான் என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக் கூடாது.