தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உத்திரமேரூர் என்னும் ஊர் உள்ளது. உத்திரமேரூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமத்தோடு சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலை வடிவில் தரிசிக்கலாம். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவல். இத்தலத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரை போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளையுடைய ராஜ கோபுரமும், வெளிப்பிரகாரத்தில் இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும் வலதுபுறம் வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.
சுவரின் மேற்புறத்தில் முருகப்பெருமான் மலையன், மாகறனுடன் போரிடும் காட்சிகளை வரைந்து.முருகனுக்கு இடதுபுறமாக கஜவள்ளி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.உள்பிரகாரத்தில் ஏகாம்பரநாதர், பெருதண்டமுடையார், திரிபுரசுந்தரி, காசி விஸ்வநாதர், சந்தான கணபதி ஆகியோரும் காட்சி தருகின்றனர்.கருவறைக்கு முன்பாக உள்ள தரிசன மண்டபத்தின் உட்புற சுவரில் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பெற்று அதில் சித்தர்கள் பலரின் வடிவம் அமைந்திருக்கிறது.அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேற இங்குள்ள முருகனைபிரார்த்தனை செய்கின்றனர்.இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்த நாள் அவர்கள் மனநிறைவை அடைகின்றனர்.