அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?

Photo of author

By Parthipan K

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?

Parthipan K

Expired eggs in government schools!! Shocked officials?

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனுர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சுமார் 150க்கும்  மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.அங்கு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு மதிய உணவில் முட்டை ஒன்று வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட முட்டை தரம் அற்றதாகவும் மற்றும் சிறிய அளவில் இருப்பதோடு அரசின் சீல் இல்லாமலும் தேதி முத்திரை இல்லாமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் மேட்டூர் சட்ட மன்ற உறுப்பினர் சதாசிவத்திற்கு புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து உடனடியாக மல்லப்பனூர்அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தார்.அந்த ஆய்வில் மாணவர்களுக்கு மதிய உணவில் வழங்கப்படும் முட்டைகள் தரமற்றதாகவும் சிறிய அளவில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து  சத்துணவு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.ஆய்வு செய்ததில் இனி இது போன்று தவறுகள் நடக்காது என கூறினார்கள்.ஆனால் அதனை ஏற்கமறுத்த சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக மாணவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக முட்டையை வழங்கும் ஒப்பந்ததாரர்களையும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அனைவரையும் விசாரிக்க மேற்கொள்ள வேண்டும்.

இதனைதொடர்ந்து மேட்டூர் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தரமற்ற முட்டை வழங்கிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.