விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்!

0
212

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்!

தளபதி விஜய்க்கு முதன் முறையாக ஆக்சன்-கட் கூறிய மகிழ்ச்சியை நடன இயக்குனர் சதீஷ் என்பவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த பாடல் காட்சியில் விஜய் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகிய இருவரும் நடனமாடி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு இளம் நடன இயக்குனர் சதீஷ் நடனம் அமைத்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ”சொல்லிட்டேன் விஜய்க்கு ஆக்சன் கட் சொல்லிட்டேன் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கும் டுவிட் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

Previous articleகிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன்
Next articleசராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here