இந்திய தலைநகர் டில்லியில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பா.ஜ.க வின் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக டில்லி ராம் லீலா மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் டில்லியில் அங்கீகாரம் இல்லாத குடிசை பகுதிகளை முறைப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பிரதமர் விளக்கவுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு களம் இறங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது . ராம்லீலா மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.