லைகா தயாரிப்பாளரோடு அஜித்தின் திடீர் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்!

0
293

லைகா தயாரிப்பாளரோடு அஜித்தின் திடீர் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித்குமார் லைகா நிறுவனத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இங்கிலாந்தில் இருக்கும் லைகா அதிபர் சுபாஷ்கரனை தலைநகர் லண்டனில் சந்தித்ததாக சொல்லப்பட்டது. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அஜித் 62 படம் பற்றி இருவரும் எதுவும் பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது. திருமணம் முடிந்து தற்போதுதான் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தின் திரைக்கதை பணிகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் கொஞ்சம் தாமதமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் தொடங்கும் என தெரிகிறது.

தற்போது அஜித் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. விரைவில் மொத்த படத்தையும் முடித்து இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.

Previous articleஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா!
Next articleஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here