இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

0
292

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் மீனா, ரஜினிக்கு ஜோடியாகவும், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மீனா, குஷ்பு ஆகிய இருவருமே ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும், வீரா படத்திற்கு பின் ரஜினிக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாக நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும், அண்ணன் தங்கை பாசம் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த தகவல்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமூக வலைதளம் மூலம் கசிந்துள்ளது என்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Previous articleஏ.டி.எம் பணத்துடன் தப்பி ஓட்டம் கார் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர் போலீசார்?
Next articleகுடியுரிமை விவகாரம்: மலேசிய பிரதமருக்கு இந்தியா பதிலடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here