கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

0
256

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ கோவிந்திரம் செக்சாரியா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் முடித்தார். இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூபாய் 47 லட்சம் ஆண்டு சம்பளத்தில் வேலை பெற்றுள்ளார். சாதனை மாணவர் யாஷை கல்லூரி நிர்வாகம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது.

அந்த கல்லூரியில் அதிகளவு ஆண்டு வருமானத்தில் வேலை பெற்ற மாணவர் யாஷ்தான் என்று கல்லூரி நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்தனர்.இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.யாஷின் இந்த சாதனை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் முன் உதாரணமாக உள்ளது.

Previous articleஊட்டச்சத்து மிகுந்த உணவுதான் கொத்தமல்லி பிரியாணி!!.. இது டேஸ்டோ தனி தான்!!! 
Next articleநம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!..