பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.
அது குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் 1ம் தேதி முதல் நெட்வொர்க்கின் பொதுச் சேவைகளான செர்காநியாஸ், ரோடலில் மற்றும் மீடியா டிஸ்டண்சு முலம் இயக்கப்படும் ரயில்களுக்கான பயனடிக்கொட்டுகள் இந்த ஆண்டு இறுதி வரை இலவசம் என அறிவித்துள்ளார். இதில் மொத்ரோக்கள், பேருந்துகள் மற்றும் டிரம்கள் அடங்கும். மேலும் பயணிகள் சேவைகள் மற்றும் 300 கிமீக்கு குறைவான நடுத்தர தூர வழிகளில் பல பயணங்களுக்கு இலவச ரயில் பயண திட்டம் பொருந்தும். அதை தொடர்ந்து ஸ்பானிஷ் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முக்கியமாக இந்தத் திட்டத்தில் பயனடைவார்கள் என்று எதிபார்க்கப்படுகிறது. ஆனால் பல பயண ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் சுற்றுலாப் பயணிகளும் இந்தத் திட்டத்தை பயன்படுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.