ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா?
கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி 2,326 கோடி டாலராக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் 2,529 கோடி டாலராக இருந்தது.
அந்த சேவைகளின் ஏற்றுமதியின் மதிப்போடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கடந்த ஜூலை மாதத்தின் மதிப்பு குறைவாக உள்ளது .கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் இறக்குமதி 22.3 சதவீதமாக அதிகரித்து 1,392 கோடி டாலராக உள்ளது எனவும் புள்ளி விவரங்கள் குறிப்பிடப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.