அரசு பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா?
இந்தியாவில் பல துறைகளில் வேலை செய்து வரும் அரசு துறை ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு தொடர்பாக பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.மத்திய அரசு வேலை என்பதால் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதனால் பயணப்படி விடுப்பும் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை காலம் விடுப்பு விதிமுறைகள் தொடர்பான நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது.அதன் படி குழந்தைகள் பிறந்த உடனே இறக்கும் தருணத்தில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் பிரவச கால விடுப்பு அனுமதிக்கப்படும் என கூறியுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தாயின் வாழ்கையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வான குழந்தை பிறந்த உடனே இறப்பது இல்லையென்றால் இறந்தே பிறப்பது ஆகியவற்றால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகரமான அதிர்ச்சிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண் ஊழியர் பிரசவ விடுப்பில் இருந்தாலும் அந்த விடுப்பை வேறு விடுப்பாக மாற்றிக்கொண்டு குழந்தை இறந்த நாளிலிருந்து 60 நாட்கள் கூடுதல் விடுப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் பிரசவம் ஆனதிலிருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே சிறப்பு விடுப்பு அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இதனால் அரசு துறைகளில் வேலை செய்து வரும் பெண் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.