இந்திய பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பரபரப்பு?

0
164

எல்லையில் இந்தியா பதிலடி 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குவது தொடர்கதையாக உள்ளது இதனிடையே பாகிஸ்தானின் அத்து மீறி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த கடும் பதிலடியில் அந்நாட்டு வீரர்கள் 2 பேர் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீர் அக்நூர் மற்றும் சுந்தர் பாரி செக்டார் நேற்று முன்தினமும் நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இதில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில் எல்லையில் பாகிஸ்தானின் அத்து மீறலை எதிர்த்து இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது குறைந்தபட்சம் இரண்டு பலி ஆகி இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும் கடும் பனி மூட்டத்தால் அவர்களின் அடையாளத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் பாகிஸ்தான் வீரர்களின் தகவல் பரிமாற்றும் போது ஒட்டு கேட்ட போது இது உறுதியாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Previous articleகோலிக்கு “கிலி” கொடுக்கும் கட்டாக் மைதானம்?
Next articleகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா! நாடு முழுவதும் வன்முறை 15க்கும் மேற்பட்டோர் பலி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here