பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம்! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த விதத்தில் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான இன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைக்கிறார்.

இந்தத் திட்டத்தின் ஆரம்ப விழா மற்றும் மாதிரி பள்ளிகள், சீர்மிகு பள்ளிகள், தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். முதல் கட்டமாக சுமார் 1 லட்சம் மாணவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இதற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்திலிருக்கின்ற பாரதி மகளிர் கல்லூரியில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்