போக்குவரத்து போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்!
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளது. அதில் 55 போக்குவரத்து ஆய்வாளர்கள் உட்பட 2,500 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இவர்கள் தினசரி போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது ,சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் முதல்வர் ,கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் செல்லும் பாதையில் மூன்று முதல் நான்கு மணிநேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு அதிக வேலையில் ஈடுபட்டு வருவோர்க்கு மேலும் வேலை சுமையை அதிகப்படுத்தும் விதமாக நாள் ஒன்றுக்கு விதிமீறல் 5௦ல்லிருந்து 60வழக்குகளும் மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களின் மீது 5 வழக்குகளும் போட வேண்டும் எனவும் போலீஸ் அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ஓய்வின்றி பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் கூறினார்.