ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா?

0
88

2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூட்யூபில் நிறுவனம் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மற்றும் அனைத்து விதமான வீடியோக்களை பார்க்க கூடிய தளத்தில் முதல் நிறுவனம் ஆகும்.

பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் இதில் வருமானத்திற்காக பல பேர் இந்த தளத்தில் யூடியூப் சேனல்கள் உருவாக்கி வருகின்றனர். அதில் கணிசமான வருமானங்களையும் பெற்று வருகின்றனர்.

குறைந்த அளவு முதல் நிறைவான வருமானம் வரை பெற்று வருகின்றனர். அதில் நிறைவான வருமானம் பெறுபவர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில்  ஜூன் 1,  2018-ம் ஆண்டு முதல் ஜூன் 1, 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அதிகம் சம்பாதித்தவர்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் காஜி முதலிடம் பிடித்துள்ளார்.

2015-ம் ஆண்டு தன்னுடைய 3 வயதில் Ryan Toys Review என்ற பெயரில் யூடியூப் சேனலை பெற்றோர்கள் உதவியுடன் சிறுவன் ரியான் காஜி தொடங்கினார். விளையாட்டு பொருட்களை பயன்படுத்துவது குறித்த வீடியோக்களை பதிவிடுவதுதான் ரியான் வழக்கம். 

தற்போது ரியான்ஸ் உலகம்(Ryan’s World) என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ள இந்த யூடியூப் சேனலுக்கு 2.2 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர், 2019-ம் ஆண்டில் மட்டும் யூடியூப் சேனல் மூலம் 185 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இதன் மூலம் யூடியூப்பில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ரியான்க்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி அனஸ்தீசியா 128 கோடி சம்பாதித்து அடுத்த இடத்தில் உள்ளார்.